மோட்டர் நியூரான் நோய் என்பது மூளை மற்றும் முதுகு தண்டிலில் உள்ள நரம்பு செல்களை பாதிக்கிறது. இது மெதுவாக மூளை மற்றும் முதுகு தண்டில் உள்ள நரம்பு செல்களை அழிக்க தொடங்கும். இதன் பாதிப்பு மெதுவாகத் தொடங்கி சில காலங்களில் மோசம் அடையும். முக்கியமாக, இது மோட்டார் செல்களை அழித்து உடல் இயக்கத்தை பாதிக்கும். இந்த நோயினால் மூளையில் உள்ள மேல்நிலை மோட்டார் நரம்புகள் (Upper Motor Neurons) மற்றும் முதுகெலும்பில் உள்ள கீழ்நிலை மோட்டார் நரம்புகள் (Lower Motor Neurons) செயலிழக்கின்றன. இந்த நோயின் தாக்கம் இரண்டு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். 1) கைகள் மற்றும் கால்களில் இருந்து பாதிப்பு தொடங்கும் 2) முகம், வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் இருந்து பாதிப்பு தொடங்கும் இதன் முதன்மையான அறிகுறிகள் தசைகள் மெலிவது, தசைகள் துடிப்பு, தசைகள் பலவினம், சுவாச பிரச்சனை, நடக்க சிரமம் மற்றும் உடல் இயக்கம், செயலிழப்பு. நோயின் அறிகுறிகள் தெரிந்தவுடன் சிகிச்சை ஆரம்பித்தால் நோயின் தாக்கத்தை குறைத்து வாழ்கை தரத்தை நீட்டிக்க முடியும். வகைகள்: நோயின் பாதிப்பு ஏற்படும் இடத்தை வைத்து 1)ஆமியோட்ரோபிக் லா...
பார்கின்சன் நோய் பாகம் -1 சென்ற தொடரில் பார்கின்சன் நோயை பற்றிய அறிமுகம், காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பல தகவல்களை பார்த்தோம். இத்தொடரில் பார்கின்சன் நோயை கண்டறியவும் சிகிச்சை மேற்கொள்ளவும் பயன்படும் மருத்துவ சோதனைகள், மேலாண்மை முறைகள், நோய்த்தாக்கத்தை குறைக்கும் தீர்வுகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் பற்றிப் பார்க்கலாம். பார்கின்சன் நோயை கண்டறிய பயன்படும் மருத்துவச் சோதனைகள்: MRI (Magnetic Resonance Imaging): மூளை அமைப்பை ஆராய உதவும். CT ஸ்கேன்: மூளையின் துல்லியமான படங்களை அளிக்கும். DaTscan (Dopamine Transporter Scan): டோபமைன் செல்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய பயன்படும். PET (Positron Emission Tomography): மூளையில் டோபமைன் செயல்பாட்டை நேரடியாக கண்காணிக்கவும், நோயின் முன்னேற்றத்தைத் துல்லியமாக மதிப்பீடு செய்யவும் உதவுகிறது. மருத்துவ மேலாண்மை குறிப்பு: நரம்பியல் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பார்கின்சன் நோயை முழுமையாக குணப்படுத்த இயலாது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நோயின் அற...