Skip to main content

பார்கின்சன் நோய் பாகம் -1




மூளை தான் மனிதனின் அனைத்து செயல்பாட்டையும் தீர்மானிக்கின்றது. அனைத்து உறுப்புகளுக்கும் செய்தி அனுப்பிச் செயல்பட வைக்கிறது.
அதில் நரம்பு மண்டலம் தான் முக்கியமான செயலினை ஆற்றுகிறது இதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் மனிதனின் உடல் இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது.

நோய் குறித்த அறிமுகம்

நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் இருக்கும் டோபமைன் எனப்படும் மூலக் கூறு சுரப்புக் குறைவால்  மனிதனின் அன்றாட இயக்க செயல்பாடுகள் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. டோபமைனின் முக்கியச் செயல்பாடு உடல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும், இது மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தினை வழங்கும் முக்கியக் காரணியாக செயல்படுகிறது.

நோயின் உயிர்க் கூறியல்:
நோயின் மூல குறியீடாக டோபமைன்  உள்ளது இதனின் சுரக்கும் தன்மை குறையும் போது தான் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் வர ஆரம்பிக்கின்றன.
டோபமைன் மூளையில் சப்ஸ்டான் ஷியா நெக்ரா, வென்ட்ரல் டெக்மென்டல் ஏரியா மற்றும் இப்போகலமஸ் பகுதிகளில் சுரக்கும். டோபமைன் நரம்பு செல்களின் குமிழிகளில் சேமிக்கப்படுகிறது. நரம்பு செல்கள் இயக்க செயல்பாட்டை ஒருங்கிணைந்து செயல்பட முக்கிய காரணியாக இருக்கிறது. மேலும் மகிழ்ச்சி, ஊக்கம் போன்ற நேரங்களில் டோபமைன் வெளியேற்றம் இருக்கும்.

பாகின்சன் நோயின் போது டோபமைன் சுரப்பானது குறைகிறது. மூளையின் மீட்புள்ளி(Basal ganglia ) என்ற பகுதியில் நரம்பு செல்கள் மரணம் அடைகின்றன. இப்படி நடக்கும் போது மனிதனின் இயக்க செயல்பாடுகள், உடல் சீரமைப்பு பிரச்சினைகள் மற்றும் நனவியல் பிரச்சினைகள் வர காரணமாகும்.



நோயின் எபிடமியாலஜி - இந்தியா

பார்கின்சன் நோயின் உலகளவில் 40 வயதிற்கு மேல் இருபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உலகளவில் 1% பேர் 60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் மட்டும் மேற்கொண்ட ஆய்வில் 1 லட்சம் பேரில் 33 முதல் 70 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக இந்த நோயினால் 40 முதல் 60 வயது உள்ளவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் பாதிப்பு விகிதம் பெண்களை விட ஆண்களே இரண்டு மடங்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் தான் பரவல் அதிகமாக உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் முதியோர்களின்  எண்ணிக்கை வரும் காலங்களில் உயர்வதால் நோயின் விகிதம் அதிகரிக்கலாம். ஆய்வு ஒன்றில் இந்தியாவில் பார்கின்சன் நோய் பார்சி மக்கள் தொகையில் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.
நோய் வர காரணம்

நோயிற்கான காரணங்கள் எதுவும் சரியாக சொல்லவில்லை அது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால் சில முக்கியக் காரணிகள்


1) மரபியல் காரணங்கள் :
 மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

2) சுற்றுச்சூழல் காரணிகள்:
வாழும் இடம் மற்றும் வேலைச்செய்யும் இடத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு நோய் வர காரணமாகும்
3) வயது (ம) பாலினம்:
வயது முதிர்வால் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் நோய் வர காரணமாகும்.
4) மூளை அமைப்பு மாற்றம்: டோபமைன் மற்றும் இதர மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் நோய் வர காரணமாகும்.

5)மருத்துவ பாதிப்புகள் : உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிறைய மருந்துகள் உட்கொள்வதும் நோய் வருவதற்கான காரணமாக அமையலாம் என்று கருதப்படுகிறது.

நோயின் அறிகுறிகள்



1) முதலாவதாக உடல் தோற்றம் பாதிக்கும் 
நோய் வருவதற்கான மூலக்கூறு - டோபமைன் சுரப்பு குறைவதால் அதன் இயக்க செயல்பாடு பாதிக்கும். அது நம் அன்றாட வேலைகளைப் பாதிக்கும் டோபமைன் குறைவதால் பேசல் கேன் லியா செயல்பாடு பாதிக்கப்படுகிறது. சப்ஸ்டான்ஷியா நைக்ரா பகுதியில் நரம்பு செல்கள் அழிவதால் உடல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க முடியாமல் போகும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன் நோக்கி (அ) பின் நோக்கி சாய்ந்து விழுந்துவிடுவார்கள்.வேகமாக நடப்பார்கள் ஆனால் நடை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

2) உடல் அசைவுகள் மெதுவாக இருக்கும்

பிராடிகைனீஷியா (Bradykinesia) நரம்பியல் நோய்களில் முக்கியமாக பார்கின்சன் நோயில் இருக்கும் அறிகுறி ஆகும். ஒரு செயலை தொடங்க தாமதமாகும். உடல் இயக்க செயல்பாடுகள் மெதுவாகவும் சில சமயங்களில் ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் வரை உட்கார்ந்து இருபார்கள். உதாரணத்திற்கு சாப்பிட வேண்டும் என்று உட்கார்ந்து விட்டால் அந்த இடத்தில் பல மணி நேரங்கள் வரை உட்கார்ந்து விடுவார்கள். உடல் இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால் எடுத்த வேலைச் செய்ய முடியாமல் போகலாம்.

3) தசைகளின் இறுக்கம்

தனசகளில் இறுக்கம் ஏற்படுகிறது. அது கை கால் அசைவுகளை பாதிக்கிறது. தசைகளின் சுருக்கம் ஏற்படும் அது உடலில் சோம்பலையும் களைப்பையும் ஏற்படுத்தும். தொடர்ந்து தசையில் இறுக்கத்தை ஏற்படுத்தி உடல் வலி ஏற்படும்.

4) எழுத்துகள் சிறியதாகும்
எழுதுவதில் சிரமம் ஏற்படும். முதலில் தெளிவாக எழுதத்தொடங்கி பின்னர் எழுத்து சிறிதாகும். உதாரணமாக வங்கியில் காசோலைகளில் கையெழுத்து போட முடியாது.

5) நடுக்கம்
கை மற்றும் கால்களில் தொடர் நடுக்கம் ஏற்படும். இந்த நோயில் வரும் நடுக்கம் ஒன்று ஓய்வில் நடுக்கம் மற்றும் செயல் நடுக்கம்

ஓய்வு நடுக்கம்: ஓய்வாக ஓர் இடத்தில் இருந்தால் நடுக்கம் இருக்கும். ஏதேனும் வேலை செய்தால் நடுக்கம் இருக்காது

செயல் நடுக்கம்: ஏதேனும் வேலை செய்தால் நடுக்கம் ஏற்படும். ஓய்வு நேரத்தில் நடுக்கம் இருக்காது.




இது மட்டும் இல்லாமல் முகத்தில் எவ்வித பாவனையும் இல்லாமல் எப்போதும் சோக முகத்துடன் இருப்பார்கள், நினைவாற்றல் குறையும், பேசுவதில் சிரமம் ஏற்படும் மிகவும் மெதுவாக பேசுவார்கள், மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, நுகர்வதில் சிரமம், மலச்சிக்கல் மற்றும் தொடு உணர்வு குறைபாடுகளும் ஏற்படும்.

தொடரும்

உங்கள் சந்தேங்கள் மற்றும் கருத்துகளுக்கு nvinkumar987@gmail.com மின்னஞ்சல் செய்யலாம்.
நன்றி

நவின் ஆர் குமார்
06/01/25

Comments

Popular posts from this blog

இணைய மாயை -2

பலருக்கு இணையத்தில் எந்தவொரு சம்பவங்களுக்கும் கருத்து தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் அவர்களை சமூகத்தில் இருந்து வெளிநபராக கருதுவார்கள் என்ற நினைப்பில் பலர் வாழுகின்றனர். அதற்கு சமீபமாக பல சம்பவங்களை கூறலாம். அதில் முதலாவதாக வருவது மனம் மற்றும் உள நல அலோசக பெருமக்கள். தொலை தூர கல்வியில் உளவியல் சார்ந்த ஏதோ ஒரு மூன்று மாத கால பயிற்சி அல்லது உளவியல் சார்ந்த சான்றிதழ் வைத்து கொண்டு தாங்கள் பெரிய மன நல அலோசகர் என்ற பெயரில் உலா வருகின்றனர். பல youtube சேனல்கள், செய்தி தாள்களில் கட்டுரைகள், தொலைகாட்சிகளின் பங்களிப்பு என பல வழிகளில் செயல்படுகின்றனர். சமீபத்தில் குமுதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை படித்தேன் "அரசுத்துறையில் 70 சதவீத போலி மனநல ஆலோசகர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!" என்ற தலைப்பில் அதில் கூறப்பட்டுள்ளது சில விஷயங்கள் பின் வருமாறு மனநல மருத்துவர்? மனநல ஆலோசகர்? முதலில், மனநல மருத்துவர்கள் யார்? மனநல ஆலோசர்கள் யார் என்பதை புரிந்துகொண்டால்தான் இதில் நடக்கும் முறைகேடுகளையும் புரிந்து கொள்ள முடியும். எம்.பி.பி.எஸ் முடித்து எம்.டி. மனநல மருத்துவம் படித்தவர்கள் ...

இணைய மாயை -1

இணையத்தில் பதில்களைத் தேடுவதன் மூலம் நம்முள் ஒரு மாயை உருவாகிறது.இது வெளிப்புற அறிவுடன்( out source ) நம் சுயசிந்தனையை இணைக்கிறது. ஒரு எளிய இணையத் தேடுதலில் நமது கேள்விகளுக்கான பதில்களை மீட்டெடுக்கக் GOOGLEளைப் பயன்படுத்திய பிறகு ஏதோ நாமே சொந்த முயற்சியில் கேள்விக்கான பதிலைக் கூறினோம் அல்லது கண்டடைந்தோம் என்ற அதீக நம்பிக்கை எழுகிறது.ஒரு வகையில் இந்த போக்கு எளிமையாக தென்பட்டாலும் அவற்றுள் உள்ளார்ந்த ஆபத்து என்ன என்பதையும் நாம் உணரவேண்டும்.இது நம்முடைய அறியாமையின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.        art by : arjun bro இத்தகைய இணைய மாயையை நாம் நிறையக் காண்பதுண்டு.அந்த மாயை மக்கள் மனதில் அதிகமாக பரவி இருக்கிறது.பல கேள்விகளுக்குப் பதிலை இணையத்தில் தேடும் போது ,பல தரப்பட்ட பதில்கள் வரும்.அதில் எது சிறந்தது என மக்கள் சிந்திப்பதில்லை.வருகின்ற பதிலில் எது அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதோ.அதை வைத்துக் கொண்டு,தங்களுக்குள் ஒரு விதமாக மாயை  ஏற்படுத்தி கொள்கிறார்கள்.தாங்கள் தான் அறிவாளி என்ற எண்ணத்தில் அதீத நம்பிக்கையில் பல பேர் இருக்கிறார்கள்.இது நம் சுயசிந்தனை ,சுய அற...