Skip to main content

நரம்பியல் நோய்கள் அறிமுகத் தொடர்

வணக்கம்.
நரம்பியல் நோய்கள் அறிமுகத் தொடர் வரும் திங்கட்கிழமையிலிருந்து (06/01/2025) வெளிவரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வரும் வாரங்களில் திங்கட்கிழமை அன்று கட்டுரைகள் வந்த வண்ணம் இருக்கும்.
இந்த தொடர் எழுத வேண்டும் என்ற முடிவு சென்ற வாரம் தான் தோன்றியது. எழுத போகிறேன் என்ற அறிவிப்பை 25/12/2024 அன்று எனது வலைப்பதிவில் (Blog) பதிவு
 செய்தேன். அன்று முதல் இத்தொடர் நன்றாக வர வேண்டும் என்று தொடர்ந்து உழைத்து கொண்டு வருகிறேன். எல்லா வல்ல இறைவனின் அருளால் சிறப்பாக வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்த தொடர் எழுத காரணம் இணையம் விரிவிடைந்து எல்லாம் உட்கார்ந்த இடத்தில் கிடைக்கும் உலகில், போலி அறிவியலின் தாக்கமும் இதை செய்தால் இந்த நோய் குணமாகும், இந்தப் பயிற்சி மேற்கொண்டால் இது குணமாகும் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டும் எழுதி கொண்டும் இருக்கிறார்கள். மேலும் நரம்பியில் நோய்கள் குறித்தச் சமகால ஆய்வுகள் குறித்த கட்டுரைகள் தமிழில் பெரிய அளவில் இல்லை. இதனை எல்லாம் எண்ணத்தில் கொண்டு இந்த தொடரை எழுத தொடங்குகிறேன். இது எல்லா வாரம் திங்கள்கிழமையில் வெளியாகும் மற்றும் மாதம் இரண்டு முறை போலி அறிவியல் முறைகளின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கட்டுரைகள் இடை இடையே வெளியாகும்.

தங்கள் ஆதரவினை எதிர்நோக்கி இப்புதிய தொடரின் முதல் கட்டுரை 06/01/2025 அன்று வெளியாகும் என்பதை மீண்டும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி.


நவின் ஆர் குமார்
03/01/2025

Comments

Popular posts from this blog

World Stroke day - October 29,2023" Together we are Greater Than Stroke." - பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு தமிழில்

அக்டோபர் 29 ஆம் நாள் ஆண்டுதோறும் உலக பக்கவாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த தினத்தின் முக்கிய நோக்கம் பக்கவாதம் வர காரணங்கள், வரமால் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் பக்கவாதம்  குறித்த விழிப்புணர்வு  மக்களிடையே ஏற்படுத்ததல் ஆகியவையே.  2023ம் வருடத்தின் கருப்பொருளாக (Theme) "Together We Are # Greater Than Stroke" என்பதை WORLD STROKE ORGANIZATION (WSO)  அறிவித்துள்ளது.  மேலும், இந்த வருடத்தின் உலக பக்கவாத தினத்தின் முக்கிய நோக்கம்  பக்கவாத அறிகுறிகளை அடையாளம் கண்டு, உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவும்,   பக்கவாதம் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் ஆகும்.   சமீபத்திய ஆய்வில் பக்கவாதம் உலகளாவிய சுமையாகக் கருதப்படுகிறது.  உலகளவில், 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு  வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் இறப்பு விகிதம் மற்றும் உடல் குறைபாடுகள் ஏற்படுகிறது. நம் இந்தியாவில் இ...

பார்கின்சன் நோய் பாகம் -1

மூளை தான் மனிதனின் அனைத்து செயல்பாட்டையும் தீர்மானிக்கின்றது. அனைத்து உறுப்புகளுக்கும் செய்தி அனுப்பிச் செயல்பட வைக்கிறது. அதில் நரம்பு மண்டலம் தான் முக்கியமான செயலினை ஆற்றுகிறது இதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் மனிதனின் உடல் இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. நோய் குறித்த அறிமுகம் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் இருக்கும் டோபமைன் எனப்படும் மூலக் கூறு சுரப்புக் குறைவால்  மனிதனின் அன்றாட இயக்க செயல்பாடுகள் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. டோபமைனின் முக்கியச் செயல்பாடு உடல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும், இது மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தினை வழங்கும் முக்கியக் காரணியாக செயல்படுகிறது. நோயின் உயிர்க் கூறியல்: நோயின் மூல குறியீடாக டோபமைன்  உள்ளது இதனின் சுரக்கும் தன்மை குறையும் போது தான் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் வர ஆரம்பிக்கின்றன. டோபமைன் மூளையில் சப்ஸ்டான் ஷியா நெக்ரா, வென்ட்ரல் டெக்மென்டல் ஏரியா மற்றும் இப்போகலமஸ் பகுதிகளில் சுரக்கும். டோபமைன் நரம்பு செல்களின் குமிழிகளில் சேமிக்கப்படுகிறது. நரம்பு செல்கள் இயக...