அக்டோபர் 29 ஆம் நாள் ஆண்டுதோறும் உலக பக்கவாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த தினத்தின் முக்கிய நோக்கம் பக்கவாதம் வர காரணங்கள், வரமால் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்ததல் ஆகியவையே. 2023ம் வருடத்தின் கருப்பொருளாக (Theme) "Together We Are # Greater Than Stroke" என்பதை WORLD STROKE ORGANIZATION (WSO) அறிவித்துள்ளது. மேலும், இந்த வருடத்தின் உலக பக்கவாத தினத்தின் முக்கிய நோக்கம் பக்கவாத அறிகுறிகளை அடையாளம் கண்டு, உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவும், பக்கவாதம் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் ஆகும். சமீபத்திய ஆய்வில் பக்கவாதம் உலகளாவிய சுமையாகக் கருதப்படுகிறது. உலகளவில், 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் இறப்பு விகிதம் மற்றும் உடல் குறைபாடுகள் ஏற்படுகிறது. நம் இந்தியாவில் இ...
Comments