Skip to main content

இணைய மாயை -2

பலருக்கு இணையத்தில் எந்தவொரு சம்பவங்களுக்கும் கருத்து தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் அவர்களை சமூகத்தில் இருந்து வெளிநபராக கருதுவார்கள் என்ற நினைப்பில் பலர் வாழுகின்றனர். அதற்கு சமீபமாக பல சம்பவங்களை கூறலாம். அதில் முதலாவதாக வருவது மனம் மற்றும் உள நல அலோசக பெருமக்கள். தொலை தூர கல்வியில் உளவியல் சார்ந்த ஏதோ ஒரு மூன்று மாத கால பயிற்சி அல்லது உளவியல் சார்ந்த சான்றிதழ் வைத்து கொண்டு தாங்கள் பெரிய மன நல அலோசகர் என்ற பெயரில் உலா வருகின்றனர். பல youtube சேனல்கள், செய்தி தாள்களில் கட்டுரைகள், தொலைகாட்சிகளின் பங்களிப்பு என பல வழிகளில் செயல்படுகின்றனர். சமீபத்தில் குமுதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை படித்தேன் "அரசுத்துறையில் 70 சதவீத போலி மனநல ஆலோசகர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!" என்ற தலைப்பில்

அதில் கூறப்பட்டுள்ளது சில விஷயங்கள் பின் வருமாறு

மனநல மருத்துவர்? மனநல ஆலோசகர்?

முதலில், மனநல மருத்துவர்கள் யார்? மனநல ஆலோசர்கள் யார் என்பதை புரிந்துகொண்டால்தான் இதில் நடக்கும் முறைகேடுகளையும் புரிந்து கொள்ள முடியும்.

எம்.பி.பி.எஸ் முடித்து எம்.டி. மனநல மருத்துவம் படித்தவர்கள் சைக்கியாட்ரிஸ்ட் எனப்படும் மனநல மருத்துவர்கள். இவர்கள், மன நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பார்கள். சைக்காலஜிஸ்ட் எனப்படும் மன நல ஆலோசகர்கள் மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிப்பதில்லை; அப்படி சிகிச்சை அளிக்கவும் கூடாது. கவுன்சிலிங் எனப்படும் உளவியல் ஆலோசனைகளை வழங்குவார்கள். இதில், மருத்துவ உளவியல் நிபுணர்கள்(Clinical Psychologist), உளவியல் (Psychologist) நிபுணர்கள் என்று இரண்டுவிதமான மனநல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். இந்த உளவியல் நிபுணர்கள் நியமனத்தில்தான் போலியான, தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிளினிகல் சைக்காலஜிஸ்ட் எனப்படும் மருத்துவ உளவியல் நிபுணர்கள் யார்? சைக்காலஜிஸ்ட் எனப்படும் உளவியல் நிபுணர்கள் யார்?

பி.எஸ்.சி சைக்காலஜி படித்து எம்.எஸ்.சி., எம்.பில் ரெகுலரில் படித்த கிளினிகல் சைக்காலஜிஸ்ட் எனப்படும் மருத்துவ உளவியல் நிபுணர்கள் டெல்லியிலுள்ள Rehabilitation Council of India ஆணையத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். சென்னை அயனாவரத்திலுள்ள கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குனர் தலைமையிலான மனநல ஆணையத்திலும் பதிவு செய்திருக்கவேண்டும். இவர்கள்தான், சுகாதாரத்துறையின் திட்டங்களில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் என்பதை (mental health care act 2018, national allied healthcare professions bill 2021) மன நல பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக சொல்கின்றது.

மக்கள் உளவியல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என முடிவு எடுத்தவுடன் நீங்கள் அலோசனை பெற போகும் மனநல ஆலோசகர் படிப்பு மற்றும் இதர விடயங்களை அறிந்த பின் செல்லவும்.

நவீன காலத்தில் மனம் மற்றும் உள்ளம் சார்ந்த பிரச்சனைகளில் பலர் சிக்கித் தவிக்கிறார்கள். அதில் இருந்து தப்பிக்க முடியாமல் பலர் உயிர் மாய்த்து கொள்கிறார்கள். இதற்க்கு சரியாக வழிகாட்டலும விழிப்புணர்வும் இல்லாதது என கூறலாம்

Certified parenting counsellor, Certified Teenage Counsellor என பல தரப்பட்ட சான்றிதழ்கள் வழங்கும் கம்பெனிகள் இருக்கின்றன.Social media Influencers என பெயரில் உலா வரும் மாமனிதர்கள் பட்டங்கள் பல பெயர் பின் இருக்கிறது.

முற்போக்கான சிந்தனையில் செயல்பட்டு.மனநலம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட சரியான ஆலோசகரை தேர்வு செய்து. அதில் இருந்து வெளியே வாருங்கள்.

இணைய மனநல ஆலோசகர் போர்வையில் இயங்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

நவின் ஆர் குமார்

23/09/2023

Comments

Popular posts from this blog

World Stroke day - October 29,2023" Together we are Greater Than Stroke." - பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு தமிழில்

அக்டோபர் 29 ஆம் நாள் ஆண்டுதோறும் உலக பக்கவாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த தினத்தின் முக்கிய நோக்கம் பக்கவாதம் வர காரணங்கள், வரமால் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் பக்கவாதம்  குறித்த விழிப்புணர்வு  மக்களிடையே ஏற்படுத்ததல் ஆகியவையே.  2023ம் வருடத்தின் கருப்பொருளாக (Theme) "Together We Are # Greater Than Stroke" என்பதை WORLD STROKE ORGANIZATION (WSO)  அறிவித்துள்ளது.  மேலும், இந்த வருடத்தின் உலக பக்கவாத தினத்தின் முக்கிய நோக்கம்  பக்கவாத அறிகுறிகளை அடையாளம் கண்டு, உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவும்,   பக்கவாதம் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் ஆகும்.   சமீபத்திய ஆய்வில் பக்கவாதம் உலகளாவிய சுமையாகக் கருதப்படுகிறது.  உலகளவில், 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு  வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் இறப்பு விகிதம் மற்றும் உடல் குறைபாடுகள் ஏற்படுகிறது. நம் இந்தியாவில் இ...

பார்கின்சன் நோய் பாகம் -1

மூளை தான் மனிதனின் அனைத்து செயல்பாட்டையும் தீர்மானிக்கின்றது. அனைத்து உறுப்புகளுக்கும் செய்தி அனுப்பிச் செயல்பட வைக்கிறது. அதில் நரம்பு மண்டலம் தான் முக்கியமான செயலினை ஆற்றுகிறது இதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் மனிதனின் உடல் இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. நோய் குறித்த அறிமுகம் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் இருக்கும் டோபமைன் எனப்படும் மூலக் கூறு சுரப்புக் குறைவால்  மனிதனின் அன்றாட இயக்க செயல்பாடுகள் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. டோபமைனின் முக்கியச் செயல்பாடு உடல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும், இது மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தினை வழங்கும் முக்கியக் காரணியாக செயல்படுகிறது. நோயின் உயிர்க் கூறியல்: நோயின் மூல குறியீடாக டோபமைன்  உள்ளது இதனின் சுரக்கும் தன்மை குறையும் போது தான் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் வர ஆரம்பிக்கின்றன. டோபமைன் மூளையில் சப்ஸ்டான் ஷியா நெக்ரா, வென்ட்ரல் டெக்மென்டல் ஏரியா மற்றும் இப்போகலமஸ் பகுதிகளில் சுரக்கும். டோபமைன் நரம்பு செல்களின் குமிழிகளில் சேமிக்கப்படுகிறது. நரம்பு செல்கள் இயக...

நரம்பியல் நோய்கள் அறிமுகத் தொடர்

வணக்கம். நரம்பியல் நோய்கள் அறிமுகத் தொடர் வரும் திங்கட்கிழமையிலிருந்து (06/01/2025) வெளிவரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வரும் வாரங்களில் திங்கட்கிழமை அன்று கட்டுரைகள் வந்த வண்ணம் இருக்கும். இந்த தொடர் எழுத வேண்டும் என்ற முடிவு சென்ற வாரம் தான் தோன்றியது. எழுத போகிறேன் என்ற அறிவிப்பை 25/12/2024 அன்று எனது வலைப்பதிவில் (Blog) பதிவு  செய்தேன். அன்று முதல் இத்தொடர் நன்றாக வர வேண்டும் என்று தொடர்ந்து உழைத்து கொண்டு வருகிறேன். எல்லா வல்ல இறைவனின் அருளால் சிறப்பாக வரும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த தொடர் எழுத காரணம் இணையம் விரிவிடைந்து எல்லாம் உட்கார்ந்த இடத்தில் கிடைக்கும் உலகில், போலி அறிவியலின் தாக்கமும் இதை செய்தால் இந்த நோய் குணமாகும், இந்தப் பயிற்சி மேற்கொண்டால் இது குணமாகும் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டும் எழுதி கொண்டும் இருக்கிறார்கள். மேலும் நரம்பியில் நோய்கள் குறித்தச் சமகால ஆய்வுகள் குறித்த கட்டுரைகள் தமிழில் பெரிய அளவில் இல்லை. இதனை எல்லாம் எண்ணத்தில் கொண்டு இந்த தொடரை எழுத தொடங்குகிறேன். இது எல்லா வாரம் திங்கள்கிழமையில்...