Skip to main content

பார்கின்சன் நோய் பாகம் -2

 


பார்கின்சன் நோய் பாகம் -1 

சென்ற தொடரில் பார்கின்சன் நோயை பற்றிய அறிமுகம், காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பல தகவல்களை பார்த்தோம். இத்தொடரில் பார்கின்சன் நோயை கண்டறியவும் சிகிச்சை மேற்கொள்ளவும் பயன்படும் மருத்துவ சோதனைகள், மேலாண்மை முறைகள், நோய்த்தாக்கத்தை குறைக்கும் தீர்வுகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் பற்றிப் பார்க்கலாம்.

பார்கின்சன் நோயை கண்டறிய பயன்படும் மருத்துவச் சோதனைகள்: 

  1. MRI (Magnetic Resonance Imaging): மூளை அமைப்பை ஆராய உதவும்.
  2. CT ஸ்கேன்: மூளையின் துல்லியமான படங்களை அளிக்கும்.
  3. DaTscan (Dopamine Transporter Scan): டோபமைன் செல்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய பயன்படும்.
  4. PET (Positron Emission Tomography): மூளையில் டோபமைன் செயல்பாட்டை நேரடியாக கண்காணிக்கவும், நோயின் முன்னேற்றத்தைத் துல்லியமாக மதிப்பீடு செய்யவும் உதவுகிறது.

மருத்துவ மேலாண்மை

குறிப்பு: நரம்பியல் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பார்கின்சன் நோயை முழுமையாக குணப்படுத்த இயலாது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நோயின் அறிகுறிகளை கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தையும் உடல் இயக்க திறனையும் மேம்படுத்த முடியும்.

பார்கின்சன் நோய்க்கு தரப்படும் முக்கிய மருந்துகள்:

  1. லெவோடோபா (Levodopa) மற்றும் கார்பிடோபா (Carbidopa):டோபமைன் அளவை அதிகரிக்கபயன்படும். அதிக அளவில் பயன்படுத்தினால்   மனத்துடிதுடிப்பு, மலச்சிக்கல் ஏற்படுலாம்

  2. டோபமைன் அகோனிஸ்ட் மாத்திரைகள்பிராமிபெக்சோல் (Pramipexole)ரோபினிரோல் (Ropinirole) போன்றவை.அதிக அளவில் எடுத்துக்கொண்டால் மன அழுத்தம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

அறிகுறிகள் நோயாளிகளுக்கு வேறுபடக்கூடியவை. இதனால், அறிகுறிகள் தென்படுகின்றதுமே நரம்பியல் நிபுணரை அணுகுவது அவசியம்.

நோய்த்தாக்கத்தை குறைக்கும் மற்ற மேலாண்மைகள்

  1. உடற் பயிற்சிகள்:தகுந்த உடற்பயிற்சிகளின் மூலம் இயக்க திறனை மேம்படுத்தலாம்த. இதற்க்கு இயன்முறை மருத்துவத்தின் மூலம் நோயின் அறிகுறிகளை மற்றும் பாதிப்புகளை வைத்து உடற் பயிற்சி மேற்கொண்டு உங்கள் உடல் இயக்கத்தை முறைமை படுத்த உதவும். அது உங்களின் வேலைகள் செய்வதிலும் நடப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்

  2. பேச்சு பயிற்சி:பேச்சு மற்றும் விழுங்குதல் சிரமங்களை தவிர்க்க, பயிற்சியாளரை அணுகவும்.

  3. செயல்முறை மருத்துவம்:தினசரி செயல்பாடுகளை எளிதாக்க பயிற்சி தேவையானது.

  4. உணவியல் ஆலோசனை:சரியான உணவியல் நிபுணரின் ஆலோசனை கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

  5. மனநல ஆலோசனை:மன அழுத்தத்தை குறைக்க மனநல நிபுணரின் ஆலோசனை பெறலாம்.

  6. யோகா மற்றும் தியானம்:மன அமைதியை அதிகரிக்க உதவும்.

நவீன சிகிச்சை முறைகள்:

  1. டிப் ப்ரெயின் ஸ்டிமுலேஷன் (Deep Brain Stimulation - DBS):இந்த சிகிச்சை முறையானது மூளையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் முக்கியமாக டோபமைன் சுரக்கும் பகுதிகளான சுப்தாலமஸ் (Subthalamic Nucleus) அல்லது குளோபஸ் பேலிடஸ் (Globus Pallidus) பகுதிகளில் சிறிய மின்கோடுகள் (electrodes) மூளையில் பொருத்தப்பட்டு மின்சிகிச்சை வழங்கும் ஒரு அறுவைச் சிகிச்சை முறையாகும். இது பார்கின்சன் நோயின் மருந்தின் தேவை குறைக்க உதவும் மற்றும் இயக்க செயல்பாட்டை அதிகரிக்கும்  முறைமையாக்கும்.

  2. டிரான்ஸ்-க்ரேனியல் மக்கினேட்டிக் ஸ்டிமுலேஷன் (Transcranial Magnetic Stimulation - TMS):மூளையின் மேற்புறத்தில் மின்னழுத்தம் ஏற்படுத்தும் சிகிச்சை முறை.இதன் பயன்பாடு குறித்த ஆய்வுகள் சென்று கொண்டு இருகின்றன

  3. ஸ்டெம் செல் சிகிச்சை (Stem Cell Therapy):இந்த சிகிச்சை முறை நோயாளியின் உடலிலிருந்து அல்லது தானமாக வழங்கப்படும் மூல செல்களை வைத்து உடலில் செலுத்தி சேதம் அடைந்த செல்களை சரி செய்யவும்  புதிய டோபமின் நரம்பு செல்களை உருவாக்கி மூளையின் சேதத்தை சரிசெய்யும் முறையாக செயல்படுகிறது

இவை அனைத்தும் தகவல் பகிர்வுக்காக மட்டுமே. சிகிச்சைக்கு நரம்பியல் நிபுணரை அணுகுவது அவசியம்.

நன்றி.

உங்கள் சந்தேங்கள் மற்றும் கருத்துகளுக்கு nvinkumar987@gmail.com மின்னஞ்சல் செய்யலாம்.


நவின் ஆர் குமார்
06/01/25


Comments

Popular posts from this blog

புதிய தொடர் தொடக்கம்

அன்பு நண்பர்களே, வரும் ஜனவரி 1 2025 முதல் நரம்பியல் நோய்கள் குறித்த அறிமுக தொடர் எனது blog ல் எழுத உள்ளேன். தொடர் குறித்த அறிமுகம் மற்றும் இதர தகவல்கள்   அன்று ஜனவரி  1 2025 அன்று blog யில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. ஆர். நவின் குமார் 25/12/24 Blogspot Link Click Here

பார்கின்சன் நோய் பாகம் -1

மூளை தான் மனிதனின் அனைத்து செயல்பாட்டையும் தீர்மானிக்கின்றது. அனைத்து உறுப்புகளுக்கும் செய்தி அனுப்பிச் செயல்பட வைக்கிறது. அதில் நரம்பு மண்டலம் தான் முக்கியமான செயலினை ஆற்றுகிறது இதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் மனிதனின் உடல் இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. நோய் குறித்த அறிமுகம் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் இருக்கும் டோபமைன் எனப்படும் மூலக் கூறு சுரப்புக் குறைவால்  மனிதனின் அன்றாட இயக்க செயல்பாடுகள் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. டோபமைனின் முக்கியச் செயல்பாடு உடல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும், இது மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தினை வழங்கும் முக்கியக் காரணியாக செயல்படுகிறது. நோயின் உயிர்க் கூறியல்: நோயின் மூல குறியீடாக டோபமைன்  உள்ளது இதனின் சுரக்கும் தன்மை குறையும் போது தான் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் வர ஆரம்பிக்கின்றன. டோபமைன் மூளையில் சப்ஸ்டான் ஷியா நெக்ரா, வென்ட்ரல் டெக்மென்டல் ஏரியா மற்றும் இப்போகலமஸ் பகுதிகளில் சுரக்கும். டோபமைன் நரம்பு செல்களின் குமிழிகளில் சேமிக்கப்படுகிறது. நரம்பு செல்கள் இயக...

இணைய மாயை -2

பலருக்கு இணையத்தில் எந்தவொரு சம்பவங்களுக்கும் கருத்து தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் அவர்களை சமூகத்தில் இருந்து வெளிநபராக கருதுவார்கள் என்ற நினைப்பில் பலர் வாழுகின்றனர். அதற்கு சமீபமாக பல சம்பவங்களை கூறலாம். அதில் முதலாவதாக வருவது மனம் மற்றும் உள நல அலோசக பெருமக்கள். தொலை தூர கல்வியில் உளவியல் சார்ந்த ஏதோ ஒரு மூன்று மாத கால பயிற்சி அல்லது உளவியல் சார்ந்த சான்றிதழ் வைத்து கொண்டு தாங்கள் பெரிய மன நல அலோசகர் என்ற பெயரில் உலா வருகின்றனர். பல youtube சேனல்கள், செய்தி தாள்களில் கட்டுரைகள், தொலைகாட்சிகளின் பங்களிப்பு என பல வழிகளில் செயல்படுகின்றனர். சமீபத்தில் குமுதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை படித்தேன் "அரசுத்துறையில் 70 சதவீத போலி மனநல ஆலோசகர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!" என்ற தலைப்பில் அதில் கூறப்பட்டுள்ளது சில விஷயங்கள் பின் வருமாறு மனநல மருத்துவர்? மனநல ஆலோசகர்? முதலில், மனநல மருத்துவர்கள் யார்? மனநல ஆலோசர்கள் யார் என்பதை புரிந்துகொண்டால்தான் இதில் நடக்கும் முறைகேடுகளையும் புரிந்து கொள்ள முடியும். எம்.பி.பி.எஸ் முடித்து எம்.டி. மனநல மருத்துவம் படித்தவர்கள் ...