சமீபகாலமாக ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த புத்தகங்களை படித்து வருகிறேன்.
அப்படி படித்த புத்தங்களில்"Testing Treatments: Better Research for Better Healthcare" என்ற புத்தகத்தை பற்றி பார்ப்போம்.
இந்த புத்தகத்தில் மருத்துவ ஆராய்ச்சியில் நடந்த தவறுகள் அதனால் நிகழ்ந்த இழப்புகள். மருத்துவ ஆராய்ச்சி எப்படி நடத்த வேண்டும் என பல தரப்பட்ட தரவுகள் உடைய புத்தகம்
மருத்துவ நிறுவனங்கள் அவர்களின் லாபநோக்கத்தில் ஆராய்ச்சி செய்து வணிகத்தை தொடங்குதல் போன்ற பல நிகழ்வுகளை அடக்கி இருக்கின்றன .
குறிப்பாக மருத்துவ துறையில் நடக்கும் ஆய்வுகளில் பிண்ணனி அதன் பின் இருக்கும் அரசியல் மற்றும் பல விடயங்களை இந்த புத்தகத்தை படிப்பதின் மூலம் நாம் அறியலாம்.
மருத்துவத்துறையில் நடந்த சார்ப்பு (bias) நிலை ஆய்வுகளின் அரசியல் மற்றும் விளைவுகளை பல தரவுகளுடன் இந்த புத்தகம் மேற்கொள்காட்டுகின்றன.
மருத்துவம் மற்றும் மருத்துவ சார்ந்த துறையில் ஆராய்ச்சி செய்ய விரும்புவர்கள். மருத்துவ ஆராயச்சிகளின் பிண்னணியை புரிந்து கொள்ள நினைப்பவர்கள் படிக்க பரிந்துரைக்கின்றேன்.
இந்த இணையம் பெருகிய காலத்தில் youtube இல் வாய்க்கு வந்த மருத்துவ முறைகளை சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் கூறும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு சரியான ஆய்வுகள் இருக்கிறதா என்று கேட்டால் தரவுகள் எதுவும் இல்லை! இதனை ஆங்கிலத்தில் ஆய்வுகள் அற்ற மருத்துவ முறை (அ) போலி மருத்துவ முறை என கூறுவார்கள்.
அதனால் எந்த ஒரு மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறையை மற்றும் பரிசோதனையை மருத்துவத்துறையை சாராத ஒருவர் கூறினால் அதன் பின் இருக்கும் ஆய்வுகள் மற்றும் அந்த சிகிச்சையினால் நடந்த ஆய்வுகள் என்ன கூறுகின்றன என நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கின்றன.
நவின் ஆர் குமார்
10/10/2023
Comments