World Stroke day - October 29,2023" Together we are Greater Than Stroke." - பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு தமிழில்
அக்டோபர் 29 ஆம் நாள் ஆண்டுதோறும் உலக பக்கவாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த தினத்தின் முக்கிய நோக்கம் பக்கவாதம் வர காரணங்கள், வரமால் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்ததல் ஆகியவையே.
2023ம் வருடத்தின் கருப்பொருளாக (Theme) "Together We Are # Greater Than Stroke" என்பதை WORLD STROKE ORGANIZATION (WSO) அறிவித்துள்ளது.
மேலும், இந்த வருடத்தின் உலக பக்கவாத தினத்தின் முக்கிய நோக்கம் பக்கவாத அறிகுறிகளை அடையாளம் கண்டு, உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவும், பக்கவாதம் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் ஆகும்.
உலகளவில், 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் இறப்பு விகிதம் மற்றும் உடல் குறைபாடுகள் ஏற்படுகிறது. நம் இந்தியாவில் இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணம் மற்றும் இயலாமைக்கான பொதுவான காரணமாக இது கருதப்படுகிறது.
பக்கவாதம் வந்தால் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
#BE_FAST
#Balance: உடற்சமநிலை இழத்தல்
#Eyes : ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழத்தல்
#Face : முகம் ஒரு புறமாக இழுத்து கொள்ளுதல்
#Arm : ஒரு பக்க கை கால்கள் பலவீனமடைந்து செயல்பட இயலாதது
#Speech : பேச இயலாததோ அல்லது பேச்சில் குளறுதல்
#Time : காலம் பொன்னானது என உணர்ந்து மருத்துவ உதவியை நாடுதல்
மேற்கொண்ட அறிகுறிகள் அறிந்த உடன் சரியாக மருத்துவ உதவியை நாடினால் பக்கவாத பாதிப்புகளை குறைத்து விரைவாக நலம் பெறலாம்.
மக்களிடைய பக்கவாதம் குறித்த கட்டுகதைகள் பல உலா வருகின்றன. அவை
# பக்கவாதம் வயதானவர்களுக்கு மட்டுமே வரும்
# பக்கவாதம் குணப்படுத்த முடியாத ஒன்று
# பக்கவாதம் வந்தால் வாழ்க்கை இருட்டிவிடும்
போன்றவை .
மருத்துவ அறிவியலின்படி பக்கவாதம் வந்தால் உடனடியாக கண்டரியப்பட்டு, அதற்கு ஏற்ப மருத்தவ சிகிச்சை எடுத்தால் சரி செய்து விட முடியும்.
பக்கவாத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் இயன்முறை மருத்துவம் (Physiotherapy) பெரும் பங்கு வகிக்கிறது.
பாதிக்கபட்டவர் மருத்துவ முறைகள் எடுத்த பின், அவர் மீண்டும் பழையபடி இயங்க மற்றும் செயல்பட இயன் முறை மருத்துவம் (Physiotherapy)மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
மக்களிடைய போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான் பல கட்டுக்கதைகளும் அவநம்பிக்கைகளும் பக்கவாதம் குறித்து பரப்பப்படுகிறது.
பொதுமக்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் சமூகத்திடையே பக்கவாதத்தின் ஆபத்துக் காரணிகள் மற்றும் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், உலகளவில் பக்கவாதம் தொடர்பான இறப்புகள் மற்றும் குறைபாடுகளின் எண்ணிக்கையை குறைக்க பெரும் உதவியாக இருக்கும்.
மேலும், இப்படி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொது சமூகத்திற்கும் பக்கவாத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மூலம் பக்கவாதம் குறித்த கட்டுக்கதைகள் மற்றும் வதந்திகள் குறையும். மக்கள் விழிப்புடன் செயல்பட உதவும்.
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு யாருக்காவது பக்கவாதம் ஏற்பட்டால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று உரிய சிக்சை பெற்று, இயன்முறை மருத்துவத்தின் பயனையும் அவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்யுங்கள்.
நவின் ஆர் குமார்
29/10/23
Comments