Skip to main content

இணைய மாயை -1



இணையத்தில் பதில்களைத் தேடுவதன் மூலம் நம்முள் ஒரு மாயை உருவாகிறது.இது வெளிப்புற அறிவுடன்(out source) நம் சுயசிந்தனையை இணைக்கிறது.
ஒரு எளிய இணையத் தேடுதலில் நமது கேள்விகளுக்கான பதில்களை மீட்டெடுக்கக் GOOGLEளைப் பயன்படுத்திய பிறகு ஏதோ நாமே சொந்த முயற்சியில் கேள்விக்கான பதிலைக் கூறினோம் அல்லது கண்டடைந்தோம் என்ற அதீக நம்பிக்கை எழுகிறது.ஒரு வகையில் இந்த போக்கு எளிமையாக தென்பட்டாலும் அவற்றுள் உள்ளார்ந்த ஆபத்து என்ன என்பதையும் நாம் உணரவேண்டும்.இது நம்முடைய அறியாமையின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
      art by : arjun bro


இத்தகைய இணைய மாயையை நாம் நிறையக் காண்பதுண்டு.அந்த மாயை மக்கள் மனதில் அதிகமாக பரவி இருக்கிறது.பல கேள்விகளுக்குப் பதிலை இணையத்தில் தேடும் போது ,பல தரப்பட்ட பதில்கள் வரும்.அதில் எது சிறந்தது என மக்கள் சிந்திப்பதில்லை.வருகின்ற பதிலில் எது அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதோ.அதை வைத்துக் கொண்டு,தங்களுக்குள் ஒரு விதமாக மாயை  ஏற்படுத்தி கொள்கிறார்கள்.தாங்கள் தான் அறிவாளி என்ற எண்ணத்தில் அதீத நம்பிக்கையில் பல பேர் இருக்கிறார்கள்.இது நம் சுயசிந்தனை ,சுய அறிவை அழித்துவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.
இந்த மாயை நம்மை ஒத்த எண்ணக் கருத்துடையவர்களாக மாற்றக் கூடும்.அது நமக்கு ஒரு பெரிய நம்பிக்கை தரக் கூடிய விசயம் என்று கருதினாலும்.அது ஒரு வகையில் நம் அறியாமையின் வெளிப்பாடு ஆகும்.ஒரு அறிவாற்றலின் சார்பு ஆகும், இதன் மூலம் எதையாவது திறமையற்றவர்கள் தங்களின் திறமையற்ற தன்மையை அடையாளம் காண முடியாது. இதனை உளவியலில் "Dunning-Kruger Effect" என்று கூறுவார்கள்.Dunning-Kruger Effect என்றால் அவர்கள் திறமையின்மையை அங்கீகரிக்கத் தவறியது மட்டுமல்லாமல், அவர்கள் உண்மையில் திறமையானவர்கள் என்ற நம்பிக்கையையும் அவர்கள் உணரக்கூடும்.


இன்றைய  தொழில்நுட்பம் தகவல்களை நமக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக மாறி இருக்கிறது. இது  தேடலின் தீவிரத்தை நம்மிடம் அதிகப்படுத்தி  நம்முடைய  "சுய அறிவு" மிகவும் பாதிப்புக்குள்ளாக்கவும்செய்கிறது.அது ஒருவரைச் சார்ந்துள்ள போக்கை நம்முள் ஏற்படுத்தும்.இது தொடர்ந்தால் மனதில் பல சிக்கல்கள் உண்டாக்கும்.இதனால்  மக்கள் தங்கள் திறனை அடையத் தவறிவிடுகிறார்கள், ஏனெனில் நமது ஆற்றலும் பெரிய அளவில் சுருங்கி விடுகிறது.அறிவின் இந்த மாயை இணையத்தைத் தவிர வேறு பல தரப்பைச் சார்ந்தும் காணப்படலாம்.

நமது மனம் இணையத்தை ஒரு கூட்டாளியாகக் கருதி,அதனைச் சார்ந்து தொடர்கிறது.அது நாம் எப்படி வெளிப்புற அறிவை நம்பி இருக்கிறோம் என்பதனை ஒரு மாயையாகக் காட்டுகிறது.
இதற்கு முந்தைய காலத்தில் மக்கள் பல கோணங்களில் தகவல்களை அறிந்தார்கள். புத்தகம்,அந்த துறை சார்ந்த வல்லுநர்களின் பேச்சு,நண்பர்களுடன் உரையாடுவதின் மூலம் அறிந்து தெளிவு அடைந்தார்கள்.இப்போது,இணையம் நம்மை வழிநடத்திச் செல்வதால்,இணையத்தில் வழியே வரும் வெளிப்புற அறிவை மட்டுமே நம்பி .தங்களின் அறியாமை காட்டுகிறார்கள். எனவே,
இணைய மாயத்திலிருந்து நாம் வெளியே வர,நல்ல விவாதங்களும்,அறிவார்ந்த தெளிந்த தேடலும் மிகவும் அவசியம். இணையத்தில் தேடுவது எல்லாம் உண்மை அல்ல. உயர்தர அய்வுகள் சார்ந்த தேடல்ககளும் தரவுகளும் பார்த்து தேட வேண்டும்
குறிப்பாக மருத்துவ துறை தேடல்களில் google சார்ந்த தேடல்களும் google சொல்லும் சில இணையதளங்களை நம்பியே ஓர் கூட்டம் இருக்கிறது.

நவின் ஆர் குமார்
17/09/2023

Comments

Popular posts from this blog

இணைய மாயை -2

பலருக்கு இணையத்தில் எந்தவொரு சம்பவங்களுக்கும் கருத்து தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் அவர்களை சமூகத்தில் இருந்து வெளிநபராக கருதுவார்கள் என்ற நினைப்பில் பலர் வாழுகின்றனர். அதற்கு சமீபமாக பல சம்பவங்களை கூறலாம். அதில் முதலாவதாக வருவது மனம் மற்றும் உள நல அலோசக பெருமக்கள். தொலை தூர கல்வியில் உளவியல் சார்ந்த ஏதோ ஒரு மூன்று மாத கால பயிற்சி அல்லது உளவியல் சார்ந்த சான்றிதழ் வைத்து கொண்டு தாங்கள் பெரிய மன நல அலோசகர் என்ற பெயரில் உலா வருகின்றனர். பல youtube சேனல்கள், செய்தி தாள்களில் கட்டுரைகள், தொலைகாட்சிகளின் பங்களிப்பு என பல வழிகளில் செயல்படுகின்றனர். சமீபத்தில் குமுதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை படித்தேன் "அரசுத்துறையில் 70 சதவீத போலி மனநல ஆலோசகர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!" என்ற தலைப்பில் அதில் கூறப்பட்டுள்ளது சில விஷயங்கள் பின் வருமாறு மனநல மருத்துவர்? மனநல ஆலோசகர்? முதலில், மனநல மருத்துவர்கள் யார்? மனநல ஆலோசர்கள் யார் என்பதை புரிந்துகொண்டால்தான் இதில் நடக்கும் முறைகேடுகளையும் புரிந்து கொள்ள முடியும். எம்.பி.பி.எஸ் முடித்து எம்.டி. மனநல மருத்துவம் படித்தவர்கள் ...

பார்கின்சன் நோய் பாகம் -1

மூளை தான் மனிதனின் அனைத்து செயல்பாட்டையும் தீர்மானிக்கின்றது. அனைத்து உறுப்புகளுக்கும் செய்தி அனுப்பிச் செயல்பட வைக்கிறது. அதில் நரம்பு மண்டலம் தான் முக்கியமான செயலினை ஆற்றுகிறது இதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் மனிதனின் உடல் இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. நோய் குறித்த அறிமுகம் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் இருக்கும் டோபமைன் எனப்படும் மூலக் கூறு சுரப்புக் குறைவால்  மனிதனின் அன்றாட இயக்க செயல்பாடுகள் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. டோபமைனின் முக்கியச் செயல்பாடு உடல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும், இது மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தினை வழங்கும் முக்கியக் காரணியாக செயல்படுகிறது. நோயின் உயிர்க் கூறியல்: நோயின் மூல குறியீடாக டோபமைன்  உள்ளது இதனின் சுரக்கும் தன்மை குறையும் போது தான் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் வர ஆரம்பிக்கின்றன. டோபமைன் மூளையில் சப்ஸ்டான் ஷியா நெக்ரா, வென்ட்ரல் டெக்மென்டல் ஏரியா மற்றும் இப்போகலமஸ் பகுதிகளில் சுரக்கும். டோபமைன் நரம்பு செல்களின் குமிழிகளில் சேமிக்கப்படுகிறது. நரம்பு செல்கள் இயக...